Wednesday, February 27, 2013

பெய‌ர் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து

ஒரு சில‌ செய்திக‌ளில் "பெய‌ர் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து" என்று அடைப்பு குறி இட்டு வேறு பெய‌ரை உப‌யோக‌ம் செய்கிறார்க‌ள். எடுத்துகாட்டு: க‌விதா (பெய‌ர் மாற்ற‌ப்ப‌ட்டுள்ள‌து) 40 வ‌ய‌துடைய‌ சென்னை க‌ண்ண‌கி ந‌க‌ரை சேர்ந்த‌...


இதில் பெய‌ர் மாற்ற‌ம் எத‌ற்கு செய்கிறார்க‌ள். ச‌ரி, ச‌ம்ம‌ந்த‌ப‌ட்ட‌ ஆளின் எதிர்கால‌ம் கார‌ண‌ம் ஆக‌ இருக்க‌லாம். ஆனால் அதே ப‌குதியை சார்ந்த‌ க‌விதாவின் எதிர்கால‌ம்?

உங்க‌ளை புரிந்துகொள்ள‌வே முடிய‌லேயே!!!

Tuesday, January 22, 2013

மகிழினி மணிமாறன் - கும்கி குயில்



ந‌ல்ல‌ குர‌ல்வ‌ள‌ம், ம‌ய‌க்கும் வ‌ரிக‌ள், திரைப‌ட‌த்தில் முத‌ல் பாட‌லாக‌ இருந்தாலும் தெளிவான‌ உச்ச‌ரிப்பு, பார‌ம்ப‌ரிய‌மான‌ இசை, ந‌ளின‌மான‌ ந‌ட‌ன‌ம் க‌ல‌ந்து தேனாக‌ இனிக்கிற‌து ‍ கும்கி ப‌ட‌ பாட‌ல். 

சொய்ங் சொய்ங்... 


ஒரே பாட‌லை நாள் முழுக்க‌ கேட்டுக்கொண்டிருந்தேன். ரொம்ப‌ நாள் ஆயிற்று இது மாதிரி கேட்டு இருந்து.


சொய் சொய்ங் சொய் சொய்ங்
கைளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நெனப்பே போதும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

வானளவு விட்டத்திலே வரப்பளவு தூரம் மச்சான்
அளவு தேவையில்ல அது தான் பாசம் மச்சான்
நாம வேண்டிக் கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேக்கும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

ஏடளவு எண்ணத்தில எழுத்தளவு சிக்கல் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் ஊரு மச்சான்
நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான்

நாடு அளவு கஷ்டத்தில நகத்தளவு இஷ்டம் மச்சான்
அளவுக் கோலேயில்ல அது தான் நேசம் மச்சான்
நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்

கையளவு நெஞ்சத்தில கடலளவு ஆச மச்சான்
அளவு ஏதும் இல்ல அது தான் காதல் மச்சான்
நாம காணும் எல்லாமே கையில் சேந்தாலே கவலை ஏது மச்சான்
சொய் சொய்ங் சொய் சொய்ங்
விக‌ட‌ன் ப‌திவில் மகிழினி மணிமாறன்:





என் ந‌ன்றிக‌ள்
கும்கி குழுவின‌ர்
ஆன‌ந்த‌ விக‌ட‌ன்.

Saturday, November 17, 2012

இனிப்பு சாப்பிடுங்க‌


இணைய‌ பதிவ‌ கோடிக‌ள் அனைவ‌ருக்கும் வ‌ண‌க்க‌ம்.

நானும் கொஞ்ச‌ம் எழுத‌லாம் என்றிருகிறேன்.
முத‌லில் சிறித‌ள‌வு இனிப்பை சாப்பிடுங்க‌.

சுருக்க‌மான‌ க‌விதைக‌ள்

க‌ண்மூடி திற‌ந்தேன் - கூசுகிற‌து
விடிய‌ற்காலை

ப‌ழ‌கி வேலை செய்யும் நான்கு வில‌ங்குக‌ள்
ம‌னித‌ன் மாடு நாய் யானை
ம‌ற்ற‌வைக‌ளை ப‌ற்றி தெரியாது

தீர‌ விசாரித்தாலும் பொய்
ந‌ம்ப‌ ம‌றுக்கும் உண்மைக‌ள்

க‌ண்ணாடி என்னை கோப‌மாக‌ பார்க்கிற‌து
இன்ப‌க் க‌ன‌வில் த‌ட்டி எழுப்பி விட்டு விட்டான்
என் அறை தோழ‌ன்

கோழிக்கு இர‌ண்டு கால்க‌ள் என்ப‌தும்
அதில் ஒன்றுகூட‌ என் பொட்ட‌ல‌த்தில் இல்லை என்ப‌தும்
தெருமுனை உண‌வ‌க‌த்தில் நான் பெற்ற‌ உண்மைக‌ள்

க‌ட‌வுளே க‌ட‌மையை செய்ய‌ ம‌றுக்கும் போது
காவிரி ஆண‌ய‌த்தை குறை சொல்லாதீர்

யாதும் ஊரே யாவ‌ரும் கேளிர்
ச‌துர‌ அடி உரூபாய் மூவாயிர‌த்து நானூறூ ம‌ட்டும்
சென்னைக்கு மிக‌ அருகாமையில்

தீபாவ‌ளியின் வ‌ள‌ர்ச்சியில் பேயாரின்
மாம‌னாருக்கும் ப‌ங்கு உண்டு


உருவாக்கினேன். உருவாக்குவேன். ந‌ன்றி.